தென்காசி மாவட்டத்தில் குவியும் கேரளமாநில சுற்றுலாப்பயணிகள் 

by Editor / 16-08-2023 12:32:21pm
தென்காசி மாவட்டத்தில் குவியும் கேரளமாநில சுற்றுலாப்பயணிகள் 

தென்காசி மாவட்டத்தில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிர் சாகுபடியானது சங்கரன்கோவில், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளைவிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் மட்டும் 1,250 ஏக்கர் பயிரிடலாம் என்று அனுமதிக்ககப்பட்டுள்ள நிலையில் கார் என்று சொல்லக்கூடிய இந்த பருவத்தில் சுமார் 500 ஏக்கர் சூரியகாந்தி சாகுபடி சுந்தபாண்டியபுரம்,கம்பிளி,அகரக்கட்டு,சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகருதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த வருடம் பயிரிடப்பட்ட சூரியகாந்தி பூ நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் சூரியகாந்தி பூக்கள் பூத்துமலர்ந்துள்ளதைக்காண அண்டைமாநிலமான கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாபபயணிகள் இங்கு குடும்பத்தோடுவந்த்து புகைப்பாடமெடுத்தும் வீடியோக்கள்,செல்பி எடுத்தும் வேடிக்கைபார்த்து சென்றவண்ணமுள்ளனர்.மேலும் கேரள மாநில  சுற்றுலாபயணிகளின் வருகையால் சாமபவர் வடகரைச்சாலையில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக குவித்துவைத்துள்ளதால் அங்கும் வியாபாரம் களைக்கட்டியுள்ளது.

 

Tags : கேரளமாநில சுற்றுலாப்பயணிகள் 

Share via