ஓடும் பேருந்தில் தீ விபத்து.. உயிர் தப்பிய பயணிகள்

by Staff / 17-08-2023 12:53:34pm
ஓடும் பேருந்தில் தீ விபத்து.. உயிர் தப்பிய பயணிகள்

அர்ஜென்டினா நாட்டில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்னஸ் என்ற பகுதியில் உள்ள சாலையில் நேற்று சென்ற பேருந்து ஒன்றில் 20 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் பின்பக்கத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். மேலும், சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

 

Tags :

Share via