கொசு உற்பத்தி அதிகரிப்பால் டெங்கு காய்ச்சல் அபாயம்

by Admin / 23-07-2021 05:46:05pm
கொசு உற்பத்தி அதிகரிப்பால் டெங்கு காய்ச்சல் அபாயம்


   
உள்ளாட்சி அமைப்பினர் சார்பில் ஒவ்வொரு வார்டு தோறும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்தது.திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகியுள்ளது.

மாலை, இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட அதிகளவில் கொசு தென்படுகிறது. கொசுக்கடியால் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் கடிக்கும் கொசுவால் உயிர்ப்பலி வாங்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தநிலையில் கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீடு, வீடாக சென்று திறந்த நிலையில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் ‘அபேட்’ மருந்து தெளித்து திறந்தநிலையில் தண்ணீரை வைக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். உள்ளாட்சி அமைப்பினர் சார்பில் ஒவ்வொரு வார்டு தோறும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்தது.

ஆனால் கொரோனாவுக்கு பின் அந்த பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் கொசு மருந்து தெளிக்கப்படாததால் கொசு உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே கொசு உற்பத்தியால் நோய் பரவுவதற்கு முன் கொசு ஒழிப்புபணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

Tags :

Share via