துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனை

by Staff / 22-10-2022 03:02:18pm
 துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனை

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதபகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்று தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக ஆளுநராக 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன். எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வ-மந்திரி மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார்" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via