9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல்

by Staff / 19-08-2023 04:20:32pm
9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல்

பறவைகளை மட்டுமே தாக்கும் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவி வருகிறது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல் தாக்கியது கண்டறியப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட 9 மாத குழந்தையை ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் (RIMS) அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை அடுத்து மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via