கள்ளக்காதலர்களை அதிர வைத்த கொலை... பிணத்தை வைத்துக்கொண்டு பைக்கில் ஊர்வலம்...

by Admin / 23-07-2021 05:54:24pm
கள்ளக்காதலர்களை அதிர வைத்த கொலை... பிணத்தை வைத்துக்கொண்டு பைக்கில் ஊர்வலம்...



பிணத்தை வைத்துக் கொண்டு பைக்கில் சுற்றிய சம்பவம்.கள்ளக்காதலர்களை அதிர வைத்த கொலை... பிணத்தை வைத்துக்கொண்டு பைக்கில் ஊர்வலம்...திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரைப்பற்றிய விசாரணையை தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில் ஆரோக்கியதாஸ் என்பவருடன் சென்றார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரிக்க போலீசார் சென்றபோது அவர் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றுவிட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. திடீரென அவர் சொந்தஊருக்கு சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடி தேனிக்கு விரைந்தனர்.

அங்குதான் காத்திருந்தது போலீசாருக்கு காத்திருந்தது.தேனியில் ஆரோக்கியதாஸை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டபோதுதான், ஆரோக்கியதாஸின் தாயான முருகேஸ்வரிக்கும் சந்தோஷ்குமாருக்கும் கள்ளத்தொடர்ப்பு இருந்தது தெரியவந்தது.சந்தோஷ்குமாரும், முருகேஸ்வரியும் ஒரே பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். முருகேஸ்வரியின் கணவர் தேனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருப்பூரில் மகனுடன் தங்கி வேலைபார்த்து வந்துள்ள முருகேஸ்வரிக்கு சந்தோஷ்குமார் கம்பெனி கொடுக்க உண்டானது கள்ளக்காதல்.பண ரீதியாகவும் முருகேஸ்வரிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் சந்தோஷ்குமார். நாளடைவில் சந்தோஷ்குமார் முருகேஸ்வரியை படாதபாடுபடுத்தியுள்ளார்.

ஆரோக்கியதாஸ் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து போதையில் அளவுக்கதிகமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவரின் செக்ஸ்டார்ச்சரை தாங்க முடியாத முருகேஸ்வரி முரண்டு பிடிக்கவே, கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.இதனையடுத்து சந்தோஷ்குமார் தனக்கு செய்த கொடுமைகளை மகனிடம் கூறி கதறவே, இருவரும் சேந்து சந்தோஷ்குமார் கதையை முடிக்க திட்டமிட்டனர்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்ற ஆரோக்கியதாஸ் அவரை வெளியே அழைத்து வந்துள்ளார்.

அவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்த ஆரோக்கியதாஸ் மற்றும் அவரது நண்பன் பாலசுப்பிரமணியன் ஆகியோர்  போதையில் இருந்த சந்தோஷ்குமாரை கொசாலை செய்து,  பிணத்தை வீசுவதற்கான இடம் தேடி பைக்கில் வைத்துக் கொண்டு ஊர், ஊராக சுற்றியுள்ளனர். பின்னர் கல்லாங்காடு பாறைக்குழியில் சடலத்தை பாறைக்குழியில் வைத்து எரித்து தப்பித்து தேனி சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முருகேஸ்வரி, ஆரோக்கியதாஸ், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.பிணத்தை வைத்துக் கொண்டு பைக்கில் சுற்றிய சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo