காவல்ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு.

by Editor / 22-08-2023 07:52:03am
காவல்ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு.

சேலம் மாவட்டம், மேச்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேச்சேரி அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து, ஆய்வாளர் சண்முகத்தை சந்தித்துள்ளார். 

அப்போது மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் தனது நிலத்தின் பத்திரத்தை நகல் எடுத்ததாகவும், பின்னர் இருசக்கர வாகனத்தில் பையில் நில பத்திரத்தை வைத்து எடுத்துக் கொண்டு வரும்போது அந்த பை தொலைந்து விட்டதாகவும், அதற்கு தொலைந்து விட்டதற்கு சான்றிதழ் வழங்கினால் நில பத்திரத்தின் உண்மை நகல் வாங்கிக் கொள்ள முடியும் என்றும், அதற்கு உதவி செய்யுமாறு கேட்டதாக   தெரிகிறது. இதனிடையே பிரபு, சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது புகாரின் மீது மேச்சேரி போலீசார் சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சான்று வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவு நகலை பிரபு மேச்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது காவல் ஆய்வாளர் சண்முகம், பத்திரம் காணாமல் போனது தொடர்பாக சான்றிதழ் வழங்க ரூபாய் 25 ஆயிரம்  லஞ்சம் கேட்டதாகவும் தெரிகிறது.மறுநாள் ஆய்வாளர் சண்முகத்தின் ஓட்டுனர் 
மனோஸ் விஜயன், புகார்தாரர் பிரபுவை தொடர்பு கொண்டு ஆய்வாளர் கேட்டபடி பணம் என்று கேட்டதாக  கூறப்படுகிறது.

இது குறித்து பிரபு சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.அதன் பேரில் தற்போது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் அவரது ஓட்டுநர் மனோஸ் விஜயன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

 

Tags :  ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் காவல்ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு.

Share via