தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்.

by Editor / 25-08-2023 10:20:49am
தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்.திருக்குவளையில் உள்ள பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை இன்று காலை தொடங்கிவைத்தார்.இதே போன்று விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தொடங்கி வைத்தார், அதேபோன்று 234 தொகுதிகளிலும் எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி தலைவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 15.75 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படுகின்றது.

 

Tags : தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்.

Share via