நிலவில் சல்ஃபர் இருப்பதை மீண்டும் உறுதி செய்த பிரக்யான் ரோவர்

by Staff / 31-08-2023 01:26:20pm
நிலவில் சல்ஃபர் இருப்பதை மீண்டும் உறுதி செய்த பிரக்யான் ரோவர்


நிலவின் தென் துருவத்தில் ரோவரில் உள்ள மற்றொரு கருவி, சல்ஃபர் (எஸ்) இருப்பதை மற்றொரு நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) S மற்றும் பிற சிறிய கூறுகளையும் பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது. சந்திரயான் 3-ன் இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் உள்ள கந்தகத்தின் மூலத்திற்கான புதிய விளக்கங்களை உருவாக்க விஞ்ஞானிகளை அறிவுறுத்தியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் சல்ஃபர் எப்படி வந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இஸ்ரோ கூறியுள்ளது.

 

Tags :

Share via