தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை

by Staff / 01-09-2023 05:24:33pm
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்கள் நடமாட்டம், பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல், இதுவே 28 மாதகால திமுக அரசின் சாதனையாக உள்ளது. தமிழ்நாடு புதைக்குழிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்னைகள் ஏற்படுவதும், காவல் துறையினற் நடவடிக்கை எடுப்படுதும் இயல்பு. ஆனால் சமூக விரோத சக்திகளை ஒடுக்க வேண்டிய காவல் துறையினர், ஆளும் கட்சியினரின் கட்டளைக்கு அடிபணிந்து கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. தற்போது நடைபெற்று வரும் எந்தவொரு குற்ற நிகழ்விலும், ஏதாவதொரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையயும் முதல்வரின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via