குப்பைகளிலிருந்து 15. 49 மெகா வாட் மின்சாரம்

by Staff / 01-09-2023 05:25:56pm
குப்பைகளிலிருந்து 15. 49 மெகா வாட் மின்சாரம்

சென்னையில் உள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பைகளைக் கொட்டாமல் அவற்றை தரம்பிரித்து பயனுள்ளதாக மாற்ற மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்து அதற்கான தீா்மானம் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், சென்னையில் தினமும் 6, 143 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் வரும் 2040-இல் 11, 793 மெட்ரிக் டன் குப்பைகள் வரை தினமும் சேகரமாகும். ஆனால் சென்னையில் 2, 000 மெட்ரிக் டன் குப்பைகள் வரை மட்டுமே கையாள வசதி உள்ளது.அதற்காக தனியாா் நிறுவனத்துடன் இணைந்து குப்பைகளைத் தரம் பிரித்து அதிலிருந்து மின்சாரம், சிஎன்ஜி வாயு, பதப்பட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 20 ஆண்டுகளுக்கு ரூ. 5, 045 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன்மூலம் ரூ. 5, 705. 88 கோடி மாநகராட்சிக்கு வருமானம் வரும். இந்தத் திட்டம் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினமும் 15. 49 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via