ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை

by Staff / 04-09-2023 11:18:53am
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் ராகுல் காந்தி இந்த யாத்திரையை நிறைவுசெய்தார். இந்நிலையில், யாத்திரையின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி, செப்டம்பர் 7 ஆம் தேதி மாவட்ட அளவில் ஊர்வலங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via