4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 06-09-2023 02:05:58pm
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via