தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

by Staff / 08-09-2023 01:32:39pm
 தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

பிரபல நடிகர் ஆர்.எஸ். சிவாஜி மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகியோர் கடந்த மாதம் இறுதியில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து இருவரும் மிகவும் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தனர். நடிகர் ஆர்.எஸ். சிவாஜி கடந்த செப். 2ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via