இஸ்லாமிய சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்க

by Staff / 09-09-2023 01:01:10pm
இஸ்லாமிய சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்க

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், தேர்தலின்போது இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்து இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும், வலியையும் அம்மக்களுக்கு அளிக்கும் என்பதை இந்த அரசு உணரத் தவறியதேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via