அயோத்தியில் ராமர் கோயில் எப்போது திறப்பு

by Staff / 11-09-2023 03:40:10pm
அயோத்தியில் ராமர் கோயில் எப்போது திறப்பு

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோயில் திறப்பு விழாவை நடத்த உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று விஎச்பி செயல் தலைவர் அலோக் குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனவரி மாதமே திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via