இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

by Editor / 03-09-2023 09:24:35am
இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்தோனேஷியா செல்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். ஆசியத் தலைவராக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தக் கூட்டங்களை நடத்தவுள்ளது. ஆசியன் உறுப்பு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர்

Share via