ஒரே நாடு ஒரே தேர்தல் - 8 பேர் கொண்ட குழு

by Editor / 03-09-2023 09:38:12am
ஒரே நாடு ஒரே தேர்தல் - 8 பேர் கொண்ட குழு

மத்தியில் 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த யோசனையை ஆதரித்து கடந்து 2018 ஆம் ஆண்டு மத்திய ஆணையம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மூலம் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்கள் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு தீவிர்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கிய திருத்தத்தை மேற்கொள்ள வரும் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டி உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து பரப்பரப்பை ஏற்படுத்தியது மத்திய அரசு. இந்த நேரத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள எட்டு பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சட்ட ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது . 
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 8 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங். மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.என்.கே.சிங், சுபாஷ் கஷ்யப், ஹரீஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிப்பு.அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து இந்த குழு ஆராயும்.

 

Tags : ஒரே நாடு ஒரே தேர்தல் - 8 பேர் கொண்ட குழு

Share via