நடிகர் மம்முட்டியின் சகோதரி காலமானார்

by Staff / 12-09-2023 11:35:48am
நடிகர் மம்முட்டியின் சகோதரி காலமானார்

நடிகர் மம்முட்டியின் சகோதரி ஆமினா (நசீமா – 70) வயது மூப்பு மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த பி.எம்.சலீம். ஆமினாவுக்கு மம்முட்டியைத் தவிர, உடன்பிறந்தவர்கள் இப்ராகிம்குட்டி, ஜக்காரியா, சௌதா மற்றும் ஷஃபீனா ஆகியோரும் உள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செம்பை ஜும்ஆ மஸ்ஜித் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலமான நிலையில், 6 மாதத்தில் சகோதரியும் நேற்று இயற்கை எய்தினார்.

 

Tags :

Share via