கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை நெருங்கியது

by Admin / 25-07-2021 06:13:26pm
கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை நெருங்கியது


   
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா 2-ம் அலை கட்டுக்குள் வந்துவிட்டது.

 ஆனால் கேரளாவில் மட்டும் கொரோனா பரவல் இன்னும் ஓயவில்லை. அங்கு நேற்று புதிதாக 18,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு, கடந்த 51 நாட்களில் இல்லாத அளவு அதிகமாகும்.

இதுதவிர மகாராஷ்டிரத்தில் 6,269, ஆந்திராவில் 2,174 பேர் உள்பட நாடு முழுவதும் புதிதாக 39,742 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 35 ஆயிரம், 39 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் 40 ஆயிரத்தை நெருங்கியது.

கடந்த 7 நாட்களில் மட்டும் கேரளாவில் 14.1 சதவீதம் பாதிப்பு உயர்ந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. அதே நேரம் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் ஒரு வார பாதிப்பு 9.9 சதவீதம் குறைந்துள்ளது.

நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 224, கேரளாவில் 98 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 535 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,20,551 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,31,429, கர்நாடகாவில் 36,352, தமிழ் நாட்டில் 33,889, டெல்லியில் 25,041, உத்தரபிரதேசத்தில் 22,749 பேர் அடங்குவர்.

நோயின் பிடியில் இருந்து 39,972 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 139 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 4,08,212 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

Tags :

Share via