குமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியது.

by Editor / 17-09-2023 10:41:43am
குமரி மாவட்டம் முழுவதும்  500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியது.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சாரலாகவும், பரவலாகவும் மழை பெய்து வந்த நிலையில்  கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை மிதமாக பெய்தது. அதன்படி காலை 8 மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 14. 2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் 210 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களுக்கும் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் தற்போது பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags : குமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியது.

Share via