இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 

by Editor / 18-09-2023 10:30:25am
இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 

நாட்டில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத அம்சங்கள் திடீரென அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 

Share via