அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விநாயகர் சிலையை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு விஜர்சனம் செய்த பொதுமக்கள்.

by Staff / 18-09-2023 03:00:26pm
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விநாயகர் சிலையை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு விஜர்சனம் செய்த பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பேரூராட்சி கீழப்புதூர் பகுதியில் அந்தப் பகுதியைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரே சமூக மக்கள் நிறைந்து காணப்படுகின்ற இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 17ஆம் தேதி மாலை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகர் சிலை ஒன்றை செங்கோட்டையிலிருந்து வாங்கி சென்று பிரதிஷ்ட செய்து பூஜை செய்து வைத்திருந்த நிலையில் அந்த விநாயகர் சிலை காவல்துறையிலும் வருவாய்த் துறையிலும் அனுமதி பெறவில்லை என்று கூறி இன்று காலை அந்த சிலையை அகற்றி செல்வதற்கு வருவாய் துறையும் காவல்துறையும் திரண்டு வந்து நின்ற நிலையில் பொதுமக்கள் அந்த சிலையை எடுக்கக்கூடாது என்றும் முறையான அனுமதி பெறுவதற்கு கடந்த 15 தினங்களாக புளியரை காவல் நிலையத்திற்கும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் பொதுமக்கள் அலைந்து வந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டதாகவும் அதனை நாளை 19ஆம் தேதி தான் விஜர்சணம் செய்வதற்கு அனுமதிப்போம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பதால் மாலைப் பொழுதில் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் காவல்துறையிடம் வருவாய் துறையிலும் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையும் வருவாய்த்துறையும்  அனுமதி பெறவில்லை என்று கூறி விநாயகர் சிலையை தாங்கள் கொண்டு செல்வோம் என பொதுமக்களிடம் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறையினரும் மற்றும் போலீசாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அடுத்த முறை அனுமதி தருவதாகவும் கூறி இந்த முறை இன்று விநாயகர் சிலையை அருகில் உள்ள அனுமன் நதியில் விஜர்சனம் செய்ய பொதுமக் களிடம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து பொதுமக்கள் விநாயகர் சிலையை தாங்களே கரைத்துக் கொள்வதாகவும் காவல்துறையினர் விஜர் சனம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்து அங்கிருந்து உடனடியாக மிகவும் வேதனையோடு விநாயகர் சிலை எடுத்து அருகில் உள்ள ஹனுமநதி கரையில் கொண்டு சென்று அங்கே விநாயகர் சிலையை விஜயரசம் செய்தனர் இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via