விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 19-09-2023 08:04:53am
விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை.

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) தூக்கிட்டு தற்கொலை.
12ம் வகுப்பு படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது,சென்னை, டிடிகே சாலையில் உள்ள வீட்டில் லாராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த லாராவை அவருடைய பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில்சென்று அவரது உடலை கைப்பற்றி உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பிப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் திரைப்படத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை.

Share via