ஒரே நாடு ஒரே தேர்தல் - இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்

by Staff / 23-09-2023 12:03:07pm
ஒரே நாடு ஒரே தேர்தல் - இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான முதல் கூட்டம்  நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள், அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடல் மற்றும் இதர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு இந்த குழுவை அமைத்துள்ளது.

 

Tags :

Share via