எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்‌ மக்கள் மகிழ்ச்சி.

by Editor / 25-09-2023 11:38:58pm
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்‌ மக்கள் மகிழ்ச்சி.

ரயில் எண். 16361/16362, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்‌ இன்று முதல் (25.09.2023) இயக்கம்.இந்த ரயில் எர்ணாகுளத்திலிருந்து சனி, திங்கள்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும். கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு இரவு 08.30 மணிக்கு வந்து புறப்படும். வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 05.45 மணிக்கு போய் சேரும்.மறுமார்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து ஞாயிறு, செவ்வாய்கிழமைகளில் மாலை 06.40 மணிக்கு புறப்படும்.கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு வந்து புறப்படும். எர்ணாகுளத்திற்கு காலை 11.40 மணிக்கு போய் சேரும்.
இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு (2AC, 3AC, SL) தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் இயக்கப்படும் போது வளைகுடாவில் வாழும் கடையநல்லூர் வாசிகள் இனி சனி,திங்கள்கிழமைகளில் எர்ணாகுளத்திலிருந்து (கொச்சி விமானம் நிலையம்) நேரடையாக ரயில் மூலம் கடையநல்லூர் வரலாம். அதேபோல், திங்கள், புதன்கிழமைகளில் கடையநல்லூரிலிருந்து ரயில் மூலம் நேரடியாக எர்ணாகுளம் (கொச்சி விமானம் நிலையம்) செல்லலாம்.என்பதால் கடையநல்லூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags : எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்‌ மக்கள் மகிழ்ச்சி.

Share via