திடீர் உடல்நலக்குறைவு  காரணமாக தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 26-09-2023 10:33:41am
திடீர் உடல்நலக்குறைவு  காரணமாக தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதியின்உறுப்பினருமான மான தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30ஆம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags : திடீர் உடல்நலக்குறைவு  காரணமாக தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.

Share via