ஏ.சி.பழுதுகாரணமாக கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இரயில் - நான்கு மணி நேரம் தாமதம்.

by Editor / 28-09-2023 10:17:01am
ஏ.சி.பழுதுகாரணமாக கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இரயில் - நான்கு மணி நேரம் தாமதம்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் காலை 6.55 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் - ரயில் கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 6.30 சென்றடையும். வழக்கம் போல இந்த ரயிலானது நேற்று புறப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பங்காரு பள்ளி இரயில் நிலையத்தை கடந்த பின் A1 பெட்டியில் AC செயல்படவில்லை என பயணிகள் தவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பெங்களூர் ரயில் நிலையம் வரும் போது அதிகாரிகளிடம்  முறையிட்டுள்ளனர். தொடர்ந்து பயனித்த பயணிகள் சேலம் ரயில் நிலையம், ஈரோடு ரயில் நிலையம் வரும் போது ஏ சி அளவு மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் பயணிகள் வேறு வழியின்றி திருப்பூர் இரயில் நிலையம் வருவதை அறிந்து செயின் மூலம் இரண்டு பெட்டிகளில் தொடர்ந்து செயினை இழுத்துள்ளனர். நேற்று இரவு 10.50 மணிக்கு வந்த இரயிலில் ஒரு மணி நேரமாக ஏ சி யை சரி செய்ய பணியாளர்கள்  முயன்றுள்ளனர் ஆனால் ஏசி சரியாகதால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து பயணிகளை அதிகாரிகள்  சமாதானம் செய்து அழைத்து சென்றனர். ஆனாலும் அடுத்த இரயில் நிலையமான போத்தனூர் இரயில் நிலையத்தில் மீண்டும் இரயிலை நிறுத்தி சரி செய்து பின்னர் கொச்சுவேலி வாராந்திர  எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ஏ சி பழுது காரணமாக இந்த கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக கொச்சுவேலி நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

 

Tags : ஏ.சி.பழுதுகாரணமாக கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இரயில் - நான்கு மணி நேரம் தாமதம்.

Share via