மாலத்தீவுக்கு புதிய அதிபர் தேர்வு

by Staff / 01-10-2023 12:52:04pm
மாலத்தீவுக்கு புதிய அதிபர் தேர்வு


மாலத்தீவில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றார். தேர்தலில் 54.06 சதவீத வாக்குகள் பெற்றார். தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் புதிய அதிபர் முகமது முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி பதவியேற்கிறார். அதுவரை இடைக்கால அதிபராக இப்ராகிம் முகமது செயல்படுவார். மாலத்தீவில் கடந்த 9ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. 5.21 லட்சம் பேர் வசிக்கும் இந்த தீவில் மொத்தம் 2,25,486 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

 

Tags :

Share via