யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாகஹாக்கி போட்டி

by Admin / 25-05-2023 10:10:45am
 யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாகஹாக்கி போட்டி

கோவில்பட்டியில் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி - இலுப்பையூரணி அம்பேத்கர் ஹாக்கி கிளப் 5க்கு 2 என்ற கோள் கணக்கில் பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.

யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்மாவட்ட அளவிலான 14 ஹாக்கி அணிகள் பங்கேற்று மூன்று நாட்கள் ஹாக்கி  போட்டிகள் நடைபெற உள்ளது.

ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முகபாரதி தலைமையில் இன்று முதல் போட்டியில் பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இலுப்பையூரணி அம்பேத்கார் ஹாக்கி அணியினரும் விளையாடினர். இப்போட்டியை கோவில்பட்டி 32 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், இந்திய ஹாக்கி வீரர் மாரீஸ்வரன் ஆகியோர் முதல் போட்டியை துவக்கி வைத்தனர்.

இன்று நடந்த போட்டியில் இலுப்பையூரணி அம்பேத்கர் ஹாக்கி கிளப் 5க்கு 2 என்ற கோள் கணக்கில் பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரை வெற்றி பெற்றது.யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் மற்றும்  33வது நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜா, அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், நடுவர்கள் மூர்த்தி,ராஜா,மற்றும் ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாகஹாக்கி போட்டி
 

Tags :

Share via