சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

by Staff / 01-10-2023 04:50:16pm
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அவருக்கு தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories

Logo