இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்

by Staff / 05-10-2023 11:59:21am
இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்

சென்னையில் இன்று திட்டமிட்டபடி அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தேசிய மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்று அதிமுக கூட்டணி முறிவு குறித்து விளக்கமளித்தார். அண்ணாமலை இல்லாமல் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது.

 

Tags :

Share via