2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி - அண்ணாமலை

by Staff / 05-10-2023 05:09:27pm
2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி - அண்ணாமலை

திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு. நாகராஜன், கே. பி. ராமலிங்கம், வி. பி. துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். இதை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறேன். இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. திமுகவா, பாஜகவா என்று சவால். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம் என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via