ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு - மாணவர்கள் கைது

by Staff / 07-10-2023 03:06:50pm
ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு - மாணவர்கள் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்ட 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்ததால், இருவரும் ஆத்திரம் அடைந்து இச்சம்பவத்தை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via