நிஜமாக தோன்றிய நிழல்.பேரூந்தை துரத்திய குட்டி குதிரை

by Editor / 13-09-2022 09:33:52am
நிஜமாக தோன்றிய நிழல்.பேரூந்தை துரத்திய குட்டி குதிரை

கோவை பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை படஓவியம் வரையப்பட்டிருந்ததை பார்த்த அந்த பகுதியில் சுற்றித்திரியும் குதிரை குட்டி ஒன்று பார்த்துள்ளது.அந்த பேரூந்திலுள்ள குதிரை நிஜ குதிரையென நினைத்து அந்த பேருந்தை செல்ல விடாமல் சுற்றி சுற்றி வந்துள்ளது. மேலும் அந்த பேருந்து கிளம்பியதும், அந்த படத்திலுள்ளது தன் தாய் குதிரை என நினைத்து அந்த பேருந்தை விடாமல் துரத்திச் சென்றது. இதனை அந்தப்பகுதியைசேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தநிலையில் அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

நிஜமாக தோன்றிய நிழல்.பேரூந்தை துரத்திய குட்டி குதிரை
 

Tags :

Share via