கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மனைவி மாற்று கும்பலில் தமிழக பிரபலங்கள்-போலீசார் அதிர்ச்சி

by Writer / 13-01-2022 10:38:15am
கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மனைவி மாற்று கும்பலில் தமிழக பிரபலங்கள்-போலீசார் அதிர்ச்சி

தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இக்குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கேரளாவில் இதற்கு முன்பும் நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில் ரகசியமாக நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபடுபவர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வாடிக்கையாளர்களை கவனித்து வந்தனர்.

ஆனால், இப்போது கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனைவி மாற்றும் குழுக்கள் பெரிய அளவில் செயல்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

14 குழுக்கள் ஒவ்வொரு குழுவிலும் 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள், அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய ரகசிய வார்த்தைகள், குழுவின் ரகசியங்கள், வெளியே கசியாத அளவிற்கு செயல்பட்டது போலீசாரை மிரள வைத்துள்ளது.

இதுபற்றி ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஒருவர் கூறும்போது, இக்குழுவில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத அளவிற்கு ஒன்று சேர்ந்து இந்த அசிங்கத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இக்குழுவிற்குள் பிரபலங்களும், இணைந்துள்ளனர். இவர்கள் ஒருமுறை வந்த பின்பு வெளியே செல்லாதவாறு குழுவை உருவாக்கியவர்கள் மிரட்டி உள்ளனர். இதற்காக அவர்கள் ஏற்கனவே உல்லாசமாக இருந்த காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதனால் குழுவில் இணைந்தவர்களால் வெளியே வரவும் முடியாமல், அதுபற்றிய தகவல்களை கூறவும் முடியாமல் தவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் வெளியே வந்து விட்டது.

இக்குழுக்கள் பற்றி இப்போது விசாரணை நடந்து வருகிறது. இதில் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் உண்மையை கண்டறிய வேண்டும். இதற்காக நுணுக்கமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கேரளாவில் இப்போது தான் இதுபோன்ற மிகப்பெரிய குடும்ப பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

கேரளாவில் மனைவி மாற்றும் குழுவினர் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், போன்ற சமூக வலைத்தளங்களில் போலி முகவரியில் கணக்கு தொடங்கி மீட் அப் கேரளா, கப்பிள் மீட், ரியல் மீட், கேரளா கக்கோல்ட் என்று பல்வேறு பெயர்களில் 14-க்கும் மேற்பட்ட குழுக்களை தொடங்கி உள்ளனர்.

இதில், உறுப்பினராக இணைந்தோரை கண்டுபிடிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் யார்? யார்? என்பதையும் எப்படி? இக்குழுவில் சேர்ந்தார்கள்? என்பதையும் சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

 

Tags :

Share via