சிக்கிம் வெள்ளம் - பலி எண்ணிக்கை உயர்வு

by Staff / 07-10-2023 03:08:04pm
சிக்கிம் வெள்ளம் - பலி எண்ணிக்கை உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 7 ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இன்னும் காணாமல் போன 142 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 13 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via