100 பதக்கம் வென்ற இந்தியா - பிரதமர் பாராட்டு

by Staff / 07-10-2023 03:09:47pm
100 பதக்கம் வென்ற இந்தியா - பிரதமர் பாராட்டு

19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதங்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், 100 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்ததில் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு வழிவகுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகள். பிரம்மிக்க வைக்கும் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via