கொடைக்கானலில் பட்டர் புரூட் சீசன்

by Editor / 23-08-2021 02:28:14pm
கொடைக்கானலில் பட்டர் புரூட் சீசன்

கொடைக்கானலில் மருத்துவ குணம் மிகுந்த பட்டர்புரூட் (அவகோடா) சீசன் தொடங்கியுள்ளது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, கூக்கால், மன்னவனூர் மற்றும் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் பட்டர்புரூட் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இந்த பழம் வயிற்று புண்ணை ஆற்றுவது, உடல் சூட்டினை தணிப்பது என மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் முகத்துக்கு பேசியல் கிரீம் தயாரிக்கவும் இந்த பழம் பயன்படுகிறது.

இப்பழங்கள் கொடைக் கானலில் இருந்து கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கொடைக்கானல் மலையில் பட்டர் புரூட் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த வருடம் விளைச்சல் அதிகம் காரணமாக ஒரு கிலோ பட்டர்புரூட் ரூ.60 முதல் 70 வரை விற்பனையானது. இந்த வருடம் விளைச்சல் குறைவால் ஒரு கிலோ பழம் ரூ.110 முதல் 120 வரை விற்பனையாகிறது. இதனால் மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

Tags :

Share via