உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

by Staff / 16-10-2023 05:05:19pm
உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் கோலில் 4.0 பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. பித்தோர்கருக்கு வடகிழக்கே 48 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

 

Tags :

Share via