பருவமழை பெய்திட 408 படையல் செய்து கிராம மக்கள் நூதன வழிபட்டனர்

by Editor / 16-10-2023 08:03:48pm
 பருவமழை  பெய்திட 408 படையல் செய்து கிராம மக்கள் நூதன வழிபட்டனர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் இந்த மூன்று மாதங்களும் மழை அதிகமாக காணப்படும் ஆனால் இந்த முறை போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது இதனால் விவசாயம் செய்வதற்கு நீரும் இல்லாமல் விவசாயிகள் ஒருபுறம் தவிர்த்து வந்தனர் பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது இந்த நிலையில் தென்காசி அடுத்த பழைய குற்றாலத்தில் உள்ள பழங்குற்றலாநாதர் திருக்கோவிலில் பருவமழை நல்லமுறையில் பெய்திட மத்தளம் பாறை ஊர் பொதுமக்கள் 408 படையல் செய்து அதனை கோயிலுக்கு எதிர் திசையை உள்ள பாறையில் வாழைகளை விரித்து அதில் படையலை வைத்து சிறப்பாக பூஜை செய்தனர் சுவாமிக்கு பால்குடம், அபிஷேகம் மற்றும் தீபாரதனை அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்

 

Tags : பருவமழை பெய்திட 408 படையல் செய்து கிராம மக்கள் நூதன வழிபட்டனர்

Share via