கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் 6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி- அமைச்சர் கீதாஜீவன்

by Admin / 18-10-2023 10:42:44pm
 கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் 6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி- அமைச்சர் கீதாஜீவன்

மகளிர் உரிமை தொகை பரிசீலனையில் உள்ளவர்கள் மனு கள ஆய்வில்  உள்ளவர்கள் காத்திருக்கலாம் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை  நிச்சயமாக கிடைக்கும் என கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு....

 

 

 

வைப்பாற்றின் குறுக்கே  நபார்டு நெடுஞ்சாலை கிராம சாலை திட்டத்தின் கீழ் 6.27 கோடி கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு  விழா - அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ மார்கண்டேயன் பணியை துவக்கி வைத்தார்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலி பட்டி கிராம முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலி நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் 6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது...

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி .வி மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்...

முன்னதாக  நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்..

இந்த உயர் மட்ட பாலம் மூலம் 20 கிராம மக்கள் பயன் பெற உள்ளதாகவும்,தூத்துக்குடி,விருதுநகர் 2 மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதாகவும் மகளிர் உரிமை துறைக்காக விண்ணபித்தவர்கள் பதிவேற்றதின் பொது சிறு சிறு பிழை ஏற்பட்டு உள்ளதால் தான் சிலருக்கு கிடைக்க பெறமால் உள்ளதாகவும் அந்த பிழை சரி செய்யபட்டு வருவதாகவும்

எதிர்க்கட்சி எம்எல்ஏவே முதல்வருக்கு தெரிவிக்கக் கூடியவர்கள் முதல்வர் ஆட்சி செய்துவருகிறார்‌மகளிர் உரிமை தொகை பரிசீலனையில் உள்ளவர்கள் மனு கள ஆய்வில்  உள்ளவர்கள் காத்திருக்கலாம் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை  நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் கீதா ஜீவன்  பேசினார்

இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர்கள் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன் திமுக ஒன்றிய செயலாளர்கள் , சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்..

 

 

Tags :

Share via