சாராய ஆலைக்கு தடை விதிக்க கோரிக்கை

by Staff / 18-10-2023 05:12:44pm
சாராய ஆலைக்கு தடை விதிக்க கோரிக்கை

பவானியில் பாஜக சார்பில் நேற்று நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்ட, மாநில தலைவர் அண்ணாமலையிடம், சின்னப்புலியூர், பெரியபுலியூர், எலவமலை பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது. அதில், பவானி அருகேயுள்ள சின்னப்புலியூர் பஞ்சாயத்தில், பண்ணாரி அம்மன் எரி சாராய வடிப்பக ஆல்கஹால் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, ஓடையின் வழியாக வெளியேற்றுவதால், நீர் வழித்தடத்தில் உள்ள பாசனக் கிணறுகளின் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓடையின் வழியாகச் செல்லும் கழிவு நீரானது, பவானி ஆற்றில் கலந்து ஆறும் மாசுபடுகிறது. சாராய உற்பத்தியின் போது உண்டாகக்கூடிய நச்சுத்தன்மை, துர்நாற்றம் பலவித நோய்களை உண்டாக்குகிறது. புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மலட்டுத்தன்மை போன்ற வியாதிகள் ஏற்படுகிறது. கால்நடைகளும் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுவதால், அவைகளை வளர்க்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது. நான்கு கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு வழங்கியும் நடவடிக்கையும் இல்லை. மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் உயிர்க்கொல்லி ஆலையான பண்ணாரி அம்மன் எரி சாராயத் தொழிற்சாலை இயங்க நிரந்தரமாக தடை செய்ய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது

 

Tags :

Share via