ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

by Editor / 21-10-2023 10:07:17am
ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யானின் முதல் விமான சோதனை வாகனமான அபார்ட் மிஷன்-1 (டிவி-டி1) இஸ்ரோவால் அக்டோபர் 21 ஆம் தேதி சனிக்கிழமை ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் தற்போது விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை விண்கலம் இன்று காலை 8 மணிக்கு ஏவப்பட வேண்டிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் கடைசி நிமிடத்தில், விஞ்ஞானிகள் சோதனையை ஒத்திவைத்தனர். தற்போது சரி செய்யப்பட்டு ராக்கெட் ஏவப்பட்டது.

ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
 

Tags : ககன்யான் மாதிரி விண்கல சோதனை

Share via