சோழர்களின் வர்த்தக முறை சிறப்பு வாய்ந்தது- குடியரசுத் தலைவர்

by Staff / 27-10-2023 05:01:01pm
சோழர்களின் வர்த்தக முறை சிறப்பு வாய்ந்தது- குடியரசுத் தலைவர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று  நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியது: "கடல் உடனான மனித உறவு மிகவும் ஆழமானது. தென்னிந்தியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். தெற்காசியாவில் சோழர்கள் சிறந்த வர்த்தக மற்றும் கலாச்சார முறையைக் கொண்டிருந்தனர். தமிழகம் தெற்கு ஆசியா உடனான வணிகம் மற்றும் கலாச்சார இணைப்பில் பங்காற்றி உள்ளது. சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் கடல் சார்ந்த வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது பருவநிலை மாற்றம் ஒரு சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. சமூகத்தின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வது மாணவர்களின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.

 

Tags :

Share via