இ.பி.எஸ் சென்ற வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு

by Staff / 30-10-2023 03:52:51pm
 இ.பி.எஸ் சென்ற வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 116 -வது ஜெயந்தி விழாவிற்குச்சென்ற அ.தி.மு.க.பொதுச்செயலாளா், எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறிய போது, சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். .இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், அவரின் வாகனம் மீது கல் செருப்பு வீசியதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்...

 

Tags :

Share via