மாஞ்சா நூல்களுக்கு தடை

by Staff / 04-11-2023 12:28:21pm
மாஞ்சா நூல்களுக்கு தடை

'மாஞ்சா நூல்கள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் பட்டங்களைப் பறக்க விட பயன்படுத்தப் படும் கண்ணாடித் துகள் பூசப்பட்ட நூல்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்குத் தமிழக அரசு முழுத் தடை விதித்துள்ளது. இது நைலான், நெகிழி அல்லது வேறு ஏதேனும் செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம். இதற்கான ஆணையானது 2023-ம் ஆண்டு அக்டோபர் 06-ம் தேதியன்று அரசினால் வெளியிடப்பட்டு, அக்டோபர் 30-ம் தேதியன்று தமிழ்நாடு அரசிதழிலும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது 1986-ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டரீதியான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Tags :

Share via