அதிமுகவில் இணைந்த திமுக பிரமுகர்

by Staff / 07-11-2023 03:58:13pm
அதிமுகவில் இணைந்த திமுக பிரமுகர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தல் வேளையில் அதிருப்தி காரணமாக தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கம். அந்த வகையில், திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர், முனைவர் நசரேத் பசிலியான் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உடனிருந்தார்.

 

Tags :

Share via