தீவிர புயலாக மாறிய மோக்கா... மீனவர்களுக்கு எச்சரிக்கை..

by Editor / 11-05-2023 11:02:58pm
தீவிர புயலாக மாறிய மோக்கா... மீனவர்களுக்கு எச்சரிக்கை..

மோக்கா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது. மோக்கா புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே வரும் 14ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பன்னிரண்டாம் தேதி காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் 13-ஆம் தேதி காலை முதல் மணிக்கு 133 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே  155 கிலோ மீட்டர் வேகத்திலும் 13-ஆம் தேதி மாலை முதல் 14ஆம் தேதி காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோமீட்டர் வேகத்திலும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்று வீச கூடும் என்றும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் 12ஆம் தேதி காலை மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 1330 கிலோமீட்டர் வேகத்திலும் 12-ஆம் தேதி மாலை 120 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடை 145 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்  அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13ஆம் தேதி மாலை வரை மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் அதன் பிறகு காற்றின் மேகம் படிப்படியாக குறையும் என்றும், வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் பனிரெண்டாம் தேதி அன்று சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும் அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13 ஆம் தேதி காலை மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும் 13-ஆம் தேதி மாலை முதல் 14ஆம் தேதி காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 13 ஆம் தேதி காலை முதல் 14ஆம் தேதி  காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திழும்.. இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via