பல்வேறு விதமான காய்ச்சல்களால் 30 பேர் சிகிச்சையில்

by Staff / 16-11-2023 04:34:29pm
பல்வேறு விதமான காய்ச்சல்களால் 30 பேர் சிகிச்சையில்

கோவை அரசு கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது கோவையில் மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு வித வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாகவும் நாள்தோறும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சராசரியாக 50 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றார்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தற்போது நான்கு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் 30 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறும் வீட்டின் முன் தேங்கும் நீரினை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். மேலும் கோவையில் கொரொனா பாதிப்புகள் இல்லை என்றார்

 

Tags :

Share via